வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மார்ச்27 அன்று ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும், பள்ளியிலும் பணி இடங்களிலும் ஆங்கில மொழியின் உபயோகத்தினால் ஏற்படும் பயன்களை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆங்கில தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் திரு M.S.சண்முகம் தலைமை தாங்கி உரையாற்றினார். பள்ளியின் செயலாளர் C.சக்திவேல் மற்றும் நிர்வாக இயக்குனர் R.அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.. பள்ளி முதல்வர் M.விஷ்ணு பிரியா கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.